மேலும் செய்திகள்
இன்று நீட் தேர்வு: கரூரில் 1,596 பேர் பங்கேற்பு
04-May-2025
புதுச்சேரி : புதுச்சேரியில் 12 மையங்களில் நீட் தேர்வு இன்று நடப்பதையொட்டி, தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இன்று 4ம் தேதி, மதியம் ௨:௦௦ மணி முதல் ௫:௦௦ வரை தேர்வு நடக்கிறது.புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லுாரி உட்பட 12 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை, 5 ஆயிரத்து 230 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை, சாதாரண காலணி அணிய வேண்டும். நகைகள் அணிந்து வரக்கூடாது, முழுக்கை சட்டை, ஜீன்ஸ், துப்பட்டா உள்ளிட்டவை அணிந்து வர கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், மொபைல், புளுடூத், இயர்போன், பேஜர் போன்ற பொருட்களை எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே போல, பென்சில் பாக்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி ஆகிவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்வு மையத்திற்கு காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வறைக்கு செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்படு வார்கள். அதன் பிறகு தேர்வு மையத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இத்தேர்வு நடக்கும் மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
04-May-2025