உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாகன ஆர்.சி., புக்கை அடகு வைத்து மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு

வாகன ஆர்.சி., புக்கை அடகு வைத்து மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு

காரைக்கால்: ஆர்.சி., புக்கை அடகு வைத்து வாகனத்தை விற்ற பெண் உள்பட 3 பேர் மீது கோர்ட்ட உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்தனர். காரைக்கால் மாவட்டம், நிரவி பழைய கடை வீதியை சேர்ந்தவர் செய்யது நிஜாமுதீன். இவர், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த நீலகண்டன் மனைவி வனிதா என்பவருக்கு சொந்தமான 2 வாகனங்களை கடந்தாண்டு ரூ. 9 லட்சத்துக்கு விலை பேசி முடித்தார். இரண்டு வாகனங்களுக்கும் 10 நாட்களுக்குள் எப்.சி., எடுத்து தருவதாக கூறி, ரூ.6.20 லட்சத்தை வனிதா பெற்றுள்ளார். ஆனால், கூறியதுபோல் வாகனத்தின் எப்.சி., ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனிடையே அந்த வாகனங்களின் ஆர்.சி. புக் பைனான்சியரிடம் அதிக தொகைக்கு அடமானம் வைத்திருப்பதை கேள்விப்பட்டு, இதுதொடர்பாக நிஜாமுதீன் வனிதாவிடம் கேட்டார். அப்போது, அந்த வாகனங்களுக்கு ஆர்.சி., எடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நிஜாமுதீனிடனிடம் வாகனம் விற்பதாக ஏமாற்றிய வாகன உரிமையாளர் வனிதா, நல்லவாடு புதுதெரு நகரை சேர்ந்த பல்தர் ஷரீப், தவளக்குப்பத்தை சேர்ந்த தமிழ் ஆகியோர் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி