தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்
விக்கிரவாண்டி : பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வாகனங்கள் சென்னைக்கு திரும்பியது.பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு கார், பஸ், வேன் என ஒரு லட்சத்து 56 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல் பிளாசவை கடந்து சென்றன.பொங்கல் முடிந்தவுடன் கடந்த 15 மற்றும் 16 தேதிகளில் தலா 36 ஆயிரம் வாகனங்களும், நேற்று மாலை 6.00 மணி வரை 30 ஆயிரம் வாகனங்கள் சென்னைக்கு திரும்பின. இதற்காக டோல்பிளாசாவில் சென்னை மார்க்கத்தில் 7 லேன்கள் திறந்து விடப்பட்டுள்ளது.தீபாவளி விட பொங்கலுக்கு அதிகளவில் பொதுமக்கள் வாகனங்களில் சென்றனர். அதை கணக்கில் கொண்ட சென்னை வாசிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க கடந்த 15ம் தேதி முதலே படிப்படியாக சென்னைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் நாளை திரும்பும் என போலீசார் கணக்கிட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.