உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வேலுநாச்சியார் இயக்க கிளை திறப்பு விழா

 வேலுநாச்சியார் இயக்க கிளை திறப்பு விழா

காரைக்கால்: காரைக்கால் புதுச்சேரி வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கத்தின் காரைக்கால் மாவட்ட கிளை திறப்பு விழா மற்றும் பாரதியின் வேலுநாச்சியார் எனும் தலைப்பில் கருத்தரங்கம் வர்த்தக சபை அரங்கத்தில் நடந்தது. காரைக்கால் மாவட்டத் தலைவர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். வேலுநாச்சியார் இயக்க நிறுவன தலைவர் கலைவரதன் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்குனர் மீனாட்சி சுந்தரம், வேலுநாச்சியார் குறித்து விளக்கினார். முன்னதாக வேலுநாச்சியார் இயக்கத்தின் மாவட்ட கவுரவத் தலைவர் திருமுருகன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, கவிதை, கட்டுரை வாசித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் ஜோதி புஷ்பவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை