வெங்கடேஸ்வரா கல்லுாரி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
வில்லியனுார் : அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில், நடந்த இளநிலை பொறியாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது. 'எங்கள் வீட்டு பிள்ளை' என்ற தலைப்பில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் பிரதீப்தேவநேயன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். அரசு துறை பொறியாளர் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர் ஜெயப்ரதாபனுக்கு, கல்விப் புல தலைவர் பாலாஜி மற்றும் மின்சார மின்னணு பொறியியல் துறை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் குழு செயலர் பாலாஜி, துணை பேராசிரியர் செல்வகுமார் மற்றும் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.