உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை: 18 பேர் கைது

இடத்தில் ரகளை: 18 பேர் கைது

புதுச்சேரி: சேதுராப்பட்டு போலீசார் நேற்று (நவ.,14) பிப்டிக் தொழிற்பேட்டையில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வானுார் உப்புவேலுார் ரங்கராஜன்,38; என்பவரை கைது செய்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று தனியார் மருத்துவமனை அருகே ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தர்மாபுரி பகுதியை சேர்ந்த தினேஷ்,39 என்பவரை கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, மூலகுளம் பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நல்லாபாளையம் இளையராஜா,30; அரும்பார்த்தபுரம் கார்த்திக், 37, ஆகியோரை கைது செய்தனர். பெரியகடை போலீசார் நேற்று பாரதி வீதியில் ரோந்து சென்றபோது, அங்கு ரகளையில் ஈடுபட்ட திருவள்ளுவர் நகர், மணிகண்டன்,29; என்பவரை கைது செய்தனர். அதேபோல், கடற்கரை சாலையில் அநாகரிகமாக நடந்து கொண்ட சென்னை பல்லாவரம் மோகன்ராஜ்,36; நித்யா சேகர், 35 ஆகியோரை கைது செய்தனர். காலாப்பட்டு போலீசார் நேற்று பிள்ளைசாவடி தொழில்நுட்ப பல்கலை கழகம் அருகில் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பிள்ளைசாவடி கரண்,20; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதேபோல் தனியார் திருமண மண்டபம் அருகில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அனுமந்தை மணிமாறன்,52; என்பவரை கைது செய்தனர். ஒதியஞ்சாலை போலீசார் நேற்று கடற்கரைசாலையில் ரோந்து சென்றபோது, தனியார் விடுதி அருகில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம், எட்டிவீரம்பாளையம் கதிரேசன்,21; சந்தோஷ்,21, ஆகியோரை கைது செய்தனர். அதேபோல், பாண்டி மெரினா கடற்கரை அருகில் ரகளையில் ஈடுபட்ட முத்தாம்பாளையம் புகழேந்தி, 28; பாரதி வீதி சந்திப்பில் ரகளை செய்த பிச்சவீரன்பேட் கார்த்திகேயன்,28; ஆகயோரை கைது செய்தனர். முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ஒத்தவாடை வீதியில் ரோந்து சென்றபோது, தனியார் பார் அருகே குடிபோதையில் ஈடுபட்ட லட்சுமி நகர் எழில்வண்ணன்,37; மரப்பாலம் பகுதியில் ரகளை செய்த முதலியார்பேட்டை சுபாஷ்,42, ஆகியோரை கைது செய்தனர். மாகே போலீசார் நேற்று முன்தினம் கல்லறை சந்திப்பில் ரோந்து சென்றபோது, அங்கு தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கோழிக்கோடு வினோத்,44; என்பவரை கைது செய்தனர். பள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் சோக்லி–பரல் பகுதியில் ரோந்து சென்றபோது, தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கண்ணுார் மாவட்டம், தலசேரி பகுதியை சேர்ந்த சிஜில்,45; என்பவரை கைது செய்தனர். ஏனாம் போலீசார் பழைய ராஜிவ் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளை செய்த ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதியை சேர்ந்த கவுதம், 21; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை