உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

வில்லியனுார்: புதுச்சேரி ரிலையன்ஸ் பவுண்டேஷன், பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தொண்டமாநத்தம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த முகாமை பா.ஜ., ஊசுடு தொகுதி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் துவக்கி வைத்தார். முன்னாள் தாசில்தார் அய்யனார், கிராம முக்கியஸ்தர்கள் தமிழரசன், சத்திமுருகன் ஆகியார் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். பிராணிகள் நல பாதுகாப்பு இயக்கத் தலைவர் செல்வமுத்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தாது உப்பு கலவை மற்றும் சத்து டாணிக் வழங்கினார். முகாமில் 250க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ரிலையன்ஸ் பவுண்டேஷன் மேலாளர் ஜெய்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை