உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் அமைச்சரின் மகன் பேசிய வீடியோ வைரல்

உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் அமைச்சரின் மகன் பேசிய வீடியோ வைரல்

பாகூர்: உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட போவது கிடையாது என, அமைச்சர் ஜான்குமாரின் மகன் வில்லியம்ஸ் ரீகன் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, பாகூர் உள்ளிட்ட தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குழுமம் சார்பில், மக்களுக்கு மழை, வெள்ள நிவாரணம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், பாகூர் தொகுதியில், அமைச்சர் ஜான்குமாரின் மகன் வில்லியம்ஸ் ரீகன் தலைமையில், நலத்திட்ட உதவிகளும், கோவில் விழாக்கள், விளையாட்டு போட்டிகளுக்கு, நிதி உதவி அளிப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இதன் மூலமாக, வில்லியம்ஸ் ரீகன், தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கி, வரும் 2026ல் தேர்தலில், பாகூர் தொகுதியில் போட்டியிட, ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் மீறி, பாகூர் தொகுதியில் தீவிர அரசியலில் அவர் ஈடுபட்டு வருகிறார்.இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், பாகூரில் அண்மையில் நடந்த விழா ஒன்றில் வில்லியம்ஸ் ரீகன் பேசியதாவது; இங்கு, இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ., வுக்கும், தற்போதுள்ள எம்.எல்.ஏ., மற்றும் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விருப்புகிறேன். இந்த தொகுதியில், நான், முதல் நாள் கால் எடுத்து வைத்த உடன், என்னுடைய டிரைவர், எனது நண்பர்கள், நாங்கள் யார் யாரை பார்த்து பேசினோமோ, அவர்களை போன் செய்து, மிரட்டுவது, அவர்களை ஆப் செய்வது என அனைத்து விஷயங்களையும் செய்துள்ளனர். இந்த உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் நாங்கள் பயப்பட போவது கிடையாது' என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை