பெண்ணிடம் போன் பறிப்பு வீடியோ வைரல்
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம், மர்மநபர்கள் மொபைல் போனை பறித்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.புதுச்சேரியை சேர்ந்தவர் பர்வீன். இவர், கடந்த 15ம் தேதி இரவு புஸ்சி வீதி வழியாக நடந்தப்படி பொபைல் போனில் பேசியபடி சென்றார்.அப்போது, அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென பர்வீன் கையில் இருந்த மொபைல் போனை பறித்து, கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து பர்வீன் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, பர்வீனிடம் இருந்து மர்மநபர்கள் மொபைல் போனை பறித்து செல்லும் சி.சி.டி.வி., வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.