உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு ஊழியர்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

அரசு ஊழியர்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரிகளை சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், காந்தி ஜெயந்தியையொட்டி, நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள். அந்தந்த கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம் ஆணையர் சதாசிவம் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, குருவிநத்தம் ராஜிவ் காந்தி திருமண மண்டபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அரசு துறை அதிகாரிகளை,தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், மண்டபத்தின் உள்ளே வைத்து, நுழைவு வாயில் கேட்டை பூட்டி, சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கடந்தகாலங்களில் கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது நடவடிக்கை இல்லாத பட்சத்தில், மீண்டும் கிராம சபை கூட்டம் ஏன் என, கண்டன கோஷங்கள் எழுப்பினர். மண்டபத்தின் உள்ள போலீஸ், உள்ளாட்சி உள்ளிட்ட துறை ஊழியர்கள், பொது மக்கள் சிலரும் சிக்கி கொண்டனர். தகவலறிந்த பாகூர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஊழியர்களையும், பொது மக்களையும் விடுவித்தனர். இதேபோல், குடியிருப்புபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், அதிகாரிகள் யாரும் வராதா நிலையில், கடை நிலை ஊழியர்களை கொணடு ஏன் கூட்டத்தை நடத்துகிறீர்கள் என கேட்டு, பஞ்சாயத்து அலுவலகத்தின் கதவை பூட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து கதவை திறந்தனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை