உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது வில்லியனுார் போலீசார் அதிரடி

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது வில்லியனுார் போலீசார் அதிரடி

வில்லியனுார் : வில்லியனுார் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் கோபாலன் கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தனர். விசாரணையில், அவர்கள், ஜி.என் பாளையம் நடராஜன் நகர், செல்வம் மகன் மாருமணி (எ) மணிகண்டன், 30; வி.மணவெளி தண்டுகரை வீதி சேது மகன் தானப்பன், 30, என தெரியவந்தது.இவர்கள் திருவண்ணாமலை பகுதியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து வில்லியனுார் பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சில்லரையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 437 கிராம் கஞ்சா, 2 மொபைல் போன்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீதும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ