நல்லொழுக்கப் பயிற்சி முகாம்; இளைஞர் மையம் அழைப்பு
புதுச்சேரி; இளைஞர் அமைதி மையம் சார்பில் மாணவர்களுக்கான இலவச நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.இது தொடர்பாக நிறுவனர் அரிமதி இளம்பரிதி விடுத்துள்ள அறிக்கை:இளைஞர் அமைதி மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எதிர்காலத்தை கருதி இலவச நல்லொழுக்கப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்வியாண்டிற்கான முகாம்கள் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட உள்ளன.நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை, உயர்கல்வி, போட்டித்தேர்வுகளை எழுதும் முறைகள், சுயக்கட்டுப்பாடு, ஒழுக்க மேலாண்மை, மனித வளம், சமூக ஊடகங்களை கையாளும் முறைகள், வாசிப்புப் பழக்கம், மது, போதை, திரைக் கவர்ச்சிகளிலிருந்து விடுபடுதல் மற்றும் தலைமைப் பண்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.விருப்பம் உள்ள பள்ளி முதல்வர்களும், தலைமையாசிரியர்களும் இளைஞர் அமைதி மையம்,72 முதல் குறுக்குத் தெரு, ஆனந்தரங்கப் பிள்ளை நகர், புதுச்சேரி என்ற முகவரியில் வரும் 20ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு பதிவுச் செய்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 94421-17704 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.