உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வ.உ.சி., அன்னை தெரேசா சிலைகளுக்கு மரியாதை

வ.உ.சி., அன்னை தெரேசா சிலைகளுக்கு மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதிய நீதிக்கட்சி சார்பில் வ.உ.சி., உருவச்சிலைக்கு, மாநில அமைப்பாளர் தேவநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், துளுவ வேளாளர் சங்கத்தினர் மரியாதை செலுத்தினர். அன்னை தெரேசா நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில், அன்னை தெரேசா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
செப் 06, 2025 08:49

சிலை வைத்து மரியாதை இருக்கட்டும், வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்ன மரியாதை, என்ன ஆதரவு? இந்த கண்கட்டு வேலைகளை விட்டுவிட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யுங்கள், மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை