மேலும் செய்திகள்
வலுதுாக்கும் போட்டியில் எஸ்.டி.சி., இரண்டாமிடம்
08-Feb-2025
புதுச்சேரி; கல்லுாரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில், சமுதாய கல்லுாரி பெண்கள் அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.புதுச்சேரி பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி, காமராஜர் கலை கல்லுாரியில் நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் என, இரு பிரிவுகளாக நடந்த போட்டிகளில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. இப்போட்டியில், லாஸ்பேட்டை சமுதாயக் கல்லுாரியின் பெண்கள் அணி முதலிடத்தையும், ஆண்கள் அணி மூன்றாமிடத்தையும் பிடித்து கோப்பையை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர், கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
08-Feb-2025