உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில், வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆறுமுகம், செயலாளர் குமரராஜா, இணை செயலாளர் தேவநாதன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகன், விஜயகுமார், காத்தமுத்து, ஆனந்தராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 1,300 வவுச்சர் ஊழியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக, 26 ஆயிரத்து 910 ஆக, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி உடனடியாக அமல்படுத்த வேண்டும். அடையாள அட்டை, இ.எஸ்.ஐ., மற்றும் இரவு பணி பாதுகாப்பு உள்ளிட்ட அரசு நல சலுகைகள் வழங்க வேண்டும். பொதுப்பணித் துறையில் உள்ள காலி பணியிடங்களை, வவுச்சர் ஊழியர்கள் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை