உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

புதுச்சேரி: சங்கராபுரத்தை சேர்ந்த தொழிலாளி, புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்காரபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் 36, கூலித்தொழிலாளி. திருமணமாகி, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். புதுச்சேரி வில்லியனுாரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் கடந்த 6 மாதமாக வசித்து வந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை