உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சங்கராபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

 சங்கராபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருக்கனுார்: வீடூர் அணை திறப்பு காரணமாக சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென ஆணையர் எழில்ராஜன் எச்சரித்துள்ளார். வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கடந்த இரு தினங்களான கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகப் பகுதியில் உள்ள வீடூர் அணை நிரம்பி, நேற்று முன்தினம் முதல் 300 கன அடி உபரி நீர் சங்கராபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கைக்கிலப்பட்டு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள படுகையணைகள் நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது. இதனை நேற்று பார்வையிட்ட, மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் தலைமையிலான ஊழியர்கள், கைக்கிலப்பட்டு உள்ளிட்ட சங்கராபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, திருபுவனை தொகுதி சோரப்பட்டு, வம்புப்பட்டு, செல்லிப்பட்டு பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை