உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊசுட்டேரி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

ஊசுட்டேரி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

வில்லியனுார்: தொடர் கனமழையால் ஊசுட்டேரி நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் பெரிய ஏரியாக உள்ளது ஊசுட்டேரி. ஏரியில் நீர்மட்டம் முழு கொள்ளவு உயரம் 3.5 மீட்டர் ஆகும். நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் கன மழையால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மழைநீர் ஊசுட்டேரிக்கு வந்தது. இதனால், நேற்று முன்தினம் 2.38 மீட்டராக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை 6:00 மணி அளவில், 2.68 மீட்டராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஏரியின் நீர்மட்டம் 30 செ.மீ., (1 அடி) உயர்ந்துள்ளது. இதனால் ஊடேரி கடல்போன்று காட்சியளிக்கிறது. தற்போது வீடுர் அணை திறக்கப்பட்டு சங்கராபரணி ஆறு வழியாக வீடூர் அணை நீர், சுத்துக்கேணி படுக்கை அணை நிரம்பி வாய்க்கால் வழியாக ஊசுட்டேரிக்கு வர துவங்கி உள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும். நீர்வரத்து அதிகரித்து வருவதால், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் லுாயிபிரகாசம் தலைமையில் இளநிலைப் பொறியாளர் சிரஞ்சிவீ மேற்பார்வையில் ஊழியர்கள் இரவு பகலாக ஊசுட்டேரியை கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி