நீர் உந்து நிலையம் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
வில்லியனுார்: வில்லியனுார் அன்னை நகரில் புதியகுடிநீர் உந்து நிலையத்தை சிவா எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். வில்லியனுார் அன்னை நகர் மற்றும் சுற்று வட்டார மக்களின் குடிநீர் தேவைக்காக முதல் குறுக்குத் தெருவில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 23 லட்சம் செலவில் குடிநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் உந்து நிலையத்தை நேற்று நடந்த விழாவில் எம்.எல்.ஏ., சிவா இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் வாசு, உதவிப் பொறியாளர் பீளாராணி, இளநிலைப் பொறியாளர் திருவேங்கடம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் குணசீலன், பாபு, செந்தில், காளிதாஸ், ஷர்மா, குமரவேல், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.