உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் பற்றாக்குறை ஆணையர் நடவடிக்கை

குடிநீர் பற்றாக்குறை ஆணையர் நடவடிக்கை

திருக்கனுார்: கொடாத்துார் பழைய காலனியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆணையர் எழில்ராஜன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு, நடவடிக்கை மேற்கொண்டனர். மண்ணாடிப்பட்டு தொகுதி கொடாத்துார் பழைய காலனியில் உள்ள இரண்டு வீதிகள் மேடாக இருப்பதால், அப்பகுதியில் குடிநீர் வேகம் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்து தரும்படி, தொகுதி எம்.எல்.ஏ., நமச்சிவாயத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அமைச்சர் உத்தரவின்பேரில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின், குடிநீர் பற்றாக்குறையை போக்க, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து தனியாக குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்த நடவடிக்கை எடுத்தார். ஆய்வின் போது, உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், கொம்யூன் ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ