உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகரப் பகுதியில் நாளை குடிநீர் கட்

நகரப் பகுதியில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி; நகரப் பகுதியில் நாளை குடிநீர் தடைப்படும் என பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் செயற்பொறியாளர் தெரவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி, குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்குட்பட்ட வடக்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 7ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 வரை, புதுச்சேரி வடக்கு நகரப் பகுதி (முழுதும்), நேரு வீதி, அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, கடற்கரை சாலை, வாழைக்குளம், சின்னையாபுரம், குருசுகுப்பம், ராமகிருஷ்ணா நகர், திருவள்ளுவர் நகர், அப்துல் கலாம் நகர், மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ