| ADDED : நவ 24, 2025 05:53 AM
எம்.பி.,க்களிடம் தேசிய ஆசிரியர் சங்கம் மனுபுதுச்சேரி: பார்லிமெண்ட்டில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என, தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாட்சா தலைமையில் சங்க நிர்வாகிகள் வைத்திலிங்கம் எம்.பி., செல்வகணபதி எம்.பி., ஆகியோரை நேரில் சந்தித்து டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பார்லிமெண்ட்டில் குரல் எழுப்ப வேண்டும் என மனு, அளித்தனர். ம னுவில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அரசு பள்ளி அனைத்து ஆசிரியர்களும் டெட் முடிக்க வேண்டும் என, தீர்ப்பு வழங்கியது. இதனால் நாடு முழுதும் 20 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து விலக்கு அளிக்க கோரி எதிர்வரும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரவும் பிரதமருக்கு கடிதம் எழுதவும், ஆசிரியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் வலியுறுத்தி நாடு முழுதும் உள்ள லோக்சபா, ராஜ்ய சபா எம்.பி.,க்களுக்கு கடிதம் கொடுக்கப்படுகிறது. எனவே, தாங்களும் புதுச்சேரி மாநிலம் சார்பில், பார்லிமெண்ட்டில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவினை பெற்றுக்கொண்ட எம்.பி.,க்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுவதாகவும், பார்லிமெண்ட்டில் ஆசிரியர்களுக்காக குரல் கொடுப்பதாகவும் உறுதியளித்தனர். பொது செயலாளர் தீபக், பொருளாளர் ராஜ்குமார், ஆசிரியர்கள் ராஜேஷ், திருமேனி அழகன் உடனிருந்தனர்.