உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கிய நபர்களுக்கு வலை

வாலிபரை தாக்கிய நபர்களுக்கு வலை

புதுச்சேரி: வாலிபரை தாக்கி மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாக்கமுடையான்பட்டு, பொய்யாக்குளத்தைச் சேர்ந்தவர் பழனி, 38; கடந்த 27ம் தேதி மாலை இ.சி.ஆர்., நேரு பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் கார்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தின் அருகே சிறுநீர் கழிக்க சென்றார்.அங்கு வந்த மர்ம நபர்கள், திருடுவதிற்கு வந்திருக்கிறியா என கேட்டு தகராறு செய்ததுடன், செங்கல்லால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை