மேலும் செய்திகள்
விளையாட்டுப் போட்டி
25-Oct-2024
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் அரசு பள்ளியில், நடந்த பளு துாக்கும் போட்டியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. புதுச்சேரி பள்ளி கல்வித்துறை (வட்டம்- 3) சார்பில், வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில், பளு துாக்கும் போட்டி நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளியில் இருந்து, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினர், பாஸ்கர் எம்.எல்.ஏ., போட்டியை துவக்கி வைத்தார். ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பிரகாஷ் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். பேராசிரியர் பழனி, சிறப்புரையாற்றினார். பளுத் துாக்கும் போட்டியின் வல்லுனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியை ஜெயசுந்தரி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
25-Oct-2024