உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நல்லுார் அரசு ஆரம்ப பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நல்லுார் அரசு ஆரம்ப பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருபுவனை : நல்லுார் அரசு ஆரம்பப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை ரேவதி வரவேற்றார். புதுச்சேரி கல்வித்துறை 5ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை, அடையாள அட்டை, மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் 'மிஷன் இங்கிலீஷ் புத்தகம்' சுற்றுலா அரங்கத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார். பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான தீனதயாளன் விளையாட்டுச் சீருடைக்கான நன்கொடையாக 15,000 ரூபாய் வழங்கினார். பள்ளிக்கு ரோட்டரி கிளப் செல்வகுமார் மூலமாக ஸ்மார்ட் டி.வி., வழங்கப்பட்டது. மாணவ மாணவர்களுக்கு அடையாள அட்டை, ரத்த பரிசோதனை மற்றும் சுற்றுலா அரங்கம் அமைக்க தேவையான செலவீனங்களை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் தங்கள் சொந்த செலவில் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ