உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நலத்திட்ட வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக அதிகரிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி

நலத்திட்ட வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக அதிகரிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையில் நலத்திட்டங்களில் வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியின் தனி நபர் வருமானம் ரூ.2,87,354 இருந்து 3,02,680 ஆக உயர்ந்துள்ளது. தனிநபர்களிடம் ரூ.15 ஆயிரம் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் தனிநபர் வருமானம் 3 லட்சத்தை தாண்டிய நிலையில், பல திட்டங்களுக்கு விண்ணப்பித்ததற்கான வருமான உச்ச வரம்பினை அதிகரிக்க, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.அதையடுத்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையில் நலத்திட்டங்கள் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை பிறப்பித்துள்ள அரசாணையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பல்வேறு நலத்திட்டங்களின் பயனை பெற விண்ணப்பிக்க முன்பு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இது ரூ.24 ஆயிரமாக மாற்றப்பட்டது. கல்வி திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக மாற்றப்பட்டது.சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதியளித்த நிலையில் தற்போது ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எட்டு திட்டங்கள்

வருமான உச்ச வரம்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான இலவச வீட்டு மனைப்பட்டா, ஏழைகளுக்கான திருமண உதவி திட்டம்,கர்ப்பிணிகள்,நீண்ட நாளாக நோய் பாதித்தவர்கள், ஈமச்சடங்கு நிதியுதவிகள், தீ விபத்து இறப்பு நிதியுதவி, இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட எட்டு திட்டங்களுக்கு பொருந்தும்.

யாருக்கு கிடையாது

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பு அதிகரித்த போதிலும் கிடுக்கிபிடி நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வருமான உச்ச வரம்பு பொருந்தாது.மேலும், எம்.பி.,கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அரசு நிறுவனங் களின் சேர்மன், மருத்துவர்கள், பட்டய கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், ஏ மற்றும் பி குரூப் அதற்கு மேல் பதவிகளில் இருப்பவர்களுக்கும் பொருந்தாது.5 ஏக்கர் விவசாய நிலம், அதற்கு மேல் வைத்து இருப்பவர்கள், 1,000 சதுர அடி, அதற்கு மேல் வீட்டுமனை வைத்திருப்பவர்களுக்கு வருமான உச்ச வரம்பு பொருந்தாது.

வீடு கட்டும் திட்டம்

பிரதமர் வீடு கட்டும் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு வருமான உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக நிர்ணயித்துள்ளது.எனவே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு இந்த வருமான உச்ச வரம்பு பொருந்தாது.இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளுக்கான நலத்திட்ட வருமான உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ