வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Kayal Karpagavalli
நவ 07, 2025 09:06
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் .......
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் பெண்களை கேலி செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாப்பம்மாள் கோவில் வீதி, பழைய சாராய ஆலை, குடியிருப்பு பகுதியில், வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பெண்களுக்கு சைகை காட்டி கேலி செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், அந்த வாலிபரை பிடித்து, விசாரித்தனர். அவர், மேற்கு வங்கத்தை சேர்ந்த, மாசும், 19, என்பதும், புதுச்சேரியில் தங்கி வேலை செய்து வருவது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் .......