உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுப்பணித்துறை தேர்வு உண்மை நிலை என்ன? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி

பொதுப்பணித்துறை தேர்வு உண்மை நிலை என்ன? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை எழுத்து தேர்வில் வெளியிடப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் வெற்றி பட்டியல்களின் உண்மை நிலையை வெளியிட வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை: பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர், ஓவர்சீர் பணிக்கு, 168 இடங்களை நிரப்ப முதல் மற்றும் இரண்டாம் தாள் என மொத்தம், 194 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில், 30 சதவீத மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.இத்தேர்வு எழுதிய, 1,551 பேரில், 26 பேர் மட்டும் வெற்றி பெற்றதாக அரசு முதலில் அறிவித்தது. இந்த பட்டியல், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின், தேர்வு செய்யப்பட்ட, 26 பேருடன் 'மெரீட்' அடிப்படையில் புதிதாக, 142 பேரையும் சேர்த்து, 168 பேர் கொண்ட திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.இரு தாள்களுக்கும் சேர்த்து, 30 சதவீத தேர்ச்சி மதிப்பெண், 58.20 என நிர்ணயிக்கப்பட்டதை, 100 சதவீதத்திற்கும் அதே மதிப்பெண்களாக கணக்கிட்டதாக செய்திகள் வெளி வருகின்றன.தேர்வு எழுதியவர்களில் அதிகம் பேர் வெற்றி பெறாததால், மதிப்பெண் மாற்றி அமைக்கப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட முதல் வெற்றி பட்டியல், இரண்டாம் வெற்றி பட்டியல் உள்ளிட்டவைகளில் உண்மை நிலைமைகளை தலைமை செயலாளர் மக்களுக்கு தெளிவான அறிக்கையாக வெளியிட வேண்டும்.இவர் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை