போலீஸ் யூனிபார்ம் கிட் நிலுவை தொகை எப்போது
புதுச்சேரி போலீசில் பணியாற்றும் கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரி வரை அனைவருக்கும் ஆண்டிற்கு ஒரு முறை யூனிபார்ம் கிட் வாங்க பணம் மாத சம்பளத்துடன் அளிக்கப்படுகிறது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு யூனிபார்ம் கிட் வாங்குவதிற்கான தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக யூனிபார்ம் கிட்டுகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017 முதல் 4 ஆண்டுகளுக்கு யூனிபார்ம் கிட் வாங்குவதிற்கான நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. நிலுவை தொகையை போலீசார் கேட்கும்போது, துறையில் போதிய நிதி இல்லை. நிதி வரும்போது மொத்த தொகையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.தற்போது அக்டோபர் மாதம் தீபாவளி வருகிறது. நிலுவை தொகையை வழங்கினால், தீபாவளிக்கு பயன்படும். நிலுவை தொகைக்காக போலீசார் காத்து கொண்டிருக்கிறார்கள்.