உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வராக இருந்தபோது மீனவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காதது ஏன்? வைத்திலிங்கம் எம்.பி.,க்கு அன்பழகன் கேள்வி

முதல்வராக இருந்தபோது மீனவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காதது ஏன்? வைத்திலிங்கம் எம்.பி.,க்கு அன்பழகன் கேள்வி

புதுச்சேரி : முதல்வராக இருந்தபோது 10 சதவீத இட ஒதுக்கீட்டினை மீனவர்களுக்கு வைத்திலிங்கம் வழங்காதது ஏன் என்று அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த தி.மு.க., காங்., ஆட்சியின் போது மத்திய அரசின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட மெரினா கடற்கரை கடை, கட்டடங்கள் முழுவதும் மீனவர்களுக்கு ஓதுக்காமல் அப்போதைய காங்., தற்போதைய பா.ஜ., பிரமுகர்களுக்கு குறைந்த வாடகையில் தாரை வார்க்கப்பட்டது.காங்., ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணராவ் நினைத்திருந்தால் வம்பாகீரப்பாளையம் மீனவ சமுதாய பெண்கள்களின் கூட்டுறவு சங்கத்திற்கு அந்த உரிமையை கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.இப்போது வைத்திலிங்கம் எம்.பி., மீனவர்களுக்கு குரல் கொடுப்பது போல் 10 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேசியுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு காங்., ஆட்சியில் வைத்திலிங்கம் எம்.பி., முதல்வராக இருந்தபோது மீனவர்களுக்கு 7 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டசபையில் அ.தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்காமல் வெறும் 2 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கினார். ஆனால் மீனவ மக்கள் தொகைக்கு ஏற்ப 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏன் வழங்கவில்லை. ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடா. இது ஏமாற்று செயல்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை