உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி

 மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி

புதுச்சேரி: மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக் கை: சட்டசபை கூட்டத்தில் முதல்வர் மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்கத் தயார் என, கூறியது வேடிக்கையாக உள்ளது. தேர்தலைப் புறக்கணிக்கத் தயாராக இருந்தால், அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். இவரை சந்திக்க மத்திய அமைச்சர்கள் வந்தபோது, மாநில அந்தஸ்து பற்றி வலியுறுத்தி இருக்கலாம். மாநில அந்தஸ்து கொடுத்தால் தான் பா.ஜ., உடன் கூட்டணி என்ற நிபந்தனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருக்கலாம். மாநில அந்தஸ்து கோரி, அறிக்கை தயாரித்து, எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரிடம் கோரி வைத்திருக்கலாம். உண்மையில் மாநில அந்தஸ்து வேண்டுமென்றால் பிரதமர் புதுச்சேரிக்கு வரும்போது மாநில அந்தஸ்து கொடுக்கும் வரை தேர்தலைப் புறக்கணிக்க மு டிவு செய்து இருக்கிறோம் என, தெரிவிக்க முடியுமா. இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள ரூ.5,396 கோடியும், சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல், குடும்பத் தலைவிக்கு நிதி உதவி, சிலிண்டருக்கான மானியம் போன்றவைக்கு மட்டுமே செலவிடப்படும். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை