மனைவி தற்கொலை: கணவன் புகார்
புதுச்சேரி: மனைவி தற்கொலை செய்து கொண்டது சம்பந்தமாக கணவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தட்டாஞ்சாவடி, திலகர் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் மனைவி பத்மாவதி, 52; இவருக்கு சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டின் அறையில் பத்மாவதி துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை, அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து பத்மாவதி இறந்ததை உறுதி செய்தனர். புகாரின்பேரில் டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.