உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

புதுச்சேரி: புதுசாரம், சின்னையன்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார், 31; தனியார் விடுதியில் மேலாளராக பணி புரிகிறார். இவரது மனைவி பூஜா, 19; கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமார், கல்லுாரி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கல்லுாரிக்கு வரவில்லை என, கூறினர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. ராஜ்குமார் புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை