மேலும் செய்திகள்
குழந்தையுடன் தாய் மாயம் கணவர் புகார்
22-Apr-2026
புதுச்சேரி: வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார். முத்திரையர்பாளையம் மேட்டுத்தெரு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 32, இவரது மனைவி சங்கீதா, 25; வீட்டில் இருந்த இவர் கடந்த 16ம் தேதி, காணாமல் போனார். இவரது கணவர் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22-Apr-2026