உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லைப் ஜாக்கெட் இன்றி படகு சவாரி அதிகாரிகள் கவனிப்பார்களா?

லைப் ஜாக்கெட் இன்றி படகு சவாரி அதிகாரிகள் கவனிப்பார்களா?

புதுச்சேரி: சுற்றுலா பயணிகளை லைப் ஜாக்கெட் இல்லாமல் ஏற்றி செல்லும் படகு உரிமையாளர் மீது சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலோனர் படகு சவாரி செய்ய விரும்புகின்றனர். மெரினா கடற்கரையில் இருந்து, அரிக்கன்மேடு போன்ற பகுதிக்கு படகு சவாரி நடக்கிறது. நேற்று மெரினா கடற்கரையில் இருந்து சென்ற சுற்றுலா படகில், சுற்றுலா பயணிகளை லைப் ஜாக்கெட் இல்லாமல் அழைத்து சென்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற படகு அரிக்கன் மேடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளின் உயிர்களை பாதுகாக்க, லைப் ஜாக்கெட் இல்லாமல் படக்கில் அழைத்து செல்கின்றனரா என சுற்றுலாத்துறையினர் கண்காணிக்க வேண்டும். லைப் ஜாக்கெட் இல்லாமல் அழைத்து செல்லும் படகின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி