உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொகுதி மறுசீரமைப்பில் புதுச்சேரிக்கு சிக்கலா? முதல்வர் ரங்கசாமி பளீச்

தொகுதி மறுசீரமைப்பில் புதுச்சேரிக்கு சிக்கலா? முதல்வர் ரங்கசாமி பளீச்

புதுச்சேரி: சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்வைத்தியநாதன்(காங்): லோக்சபா தேர்தல் தொகுதி சீரமைப்பில் புதுச்சேரி அரசின் நிலைப்பாடு என்ன. மத்திய அரசு அறிவித்துள்ள தொகுதி மறு சீரமைப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கான ஒரு எம்.பி., சீட்டினை இழக்க நேரிடுமா?முதல்வர் ரங்கசாமி: இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு-82 மற்றும் 170ன்படி ஒவ்வொரு மக்கள் கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு வரைமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் 1951, 1961 மற்றும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு லோக்சபா தொகுதி எண்ணிக்கை சீரமைக்கப்பட்டது. 42-வது திருத்த சட்டத்தின் மூலம் லோக்சபா தொகுதி எண்ணிக்கை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே 2001ம் ஆண்டு வரை தொடர வழிவகுத்தது. பின்னர் 84-வது திருத்த சட்டம் லோக்சபா தொகுதி எண்ணிக்கை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 2026ம் ஆண்டு வரை மேலும் தொடர வழிவகை செய்தது. 2026ம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுசீரமைப்பு ஆணையம் அமைக்க பார்லிமெண்ட் சட்டம் இயற்றப்பட வேண்டும்.மறுசீரமைப்பு ஆணையத்தால் அழைக்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபையில் புதுச்சேரியின் பிரதிநிதித்துவத்தை காக்க வலியுறுத்தப்படும். இந்திய அரசியலமைப்பின் 82 மற்றும் 170-வது பிரிவின்படி தொகுதி சீரமைப்பு பார்லிமெண்ட்டிற்கும், மாநில சட்டசபைக்கும் பொருந்தும்.வைத்தியநாதன் (காங்); தொகுதி சீரமைப்பில் புதுச்சேரி உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். புதுச்சேரியின் சட்டசபை தொகுதிகளில் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க வேண்டும்.சபாநாயகர் செல்வம்: புதுச்சேரி ஒரு லோக்சபா ஒதுக்கப்பட்டுள்ளது. மறு சீரமைப்பில் பிரதிநிதித்துவத்தை புதுச்சேரி இழக்க வாய்ப்பினை. இந்த கேள்வியே புதுச்சேரிக்கு பொருந்தாது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை