உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படுமா?

சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படுமா?

சூரமங்கலம் - கரியமாணிக்கம் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்த பேனர் கலாசாரத்தால் வாகன ஓட்டிகள், பாத சாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என, எச்சரித்த பின்பும் பேனர்கள் வைக்கும் கலாசாரம் அங்காங்கே புற்றீசல் போல் முளைத்து வருகிறது.கிராமப்புறங்களில் வீட்டு சுப நிகழ்ச்சிகள், கும்பாபிேஷகம், துக்க நிகழ்ச்சிகளுக்கு சகட்ட மேனிக்கு பேனர்கள் வைக்கின்றனர். கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு முதல் சூரமங்கலம் வரை கடந்த 6 நாட்களுக்கு முன்பு கும்பாபி ேஷகம் விழாவிற்கு அரசியல் கட்சி பிரமுகர்களை வரவேற்று சாலையின் இருபுறமும் பேனர்கள் வைத்துள்ளனர்.ஆனால், இதுவரை அகற்றவில்லை. இச்சாலை வழியாக செல்லும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், போலீசாரும் சென்று வருகின்றனர். அவர்களின் கண்களுக்கு இந்த பேனர்கள் வைத்திருப்பது தெரியவில்லையா. எனவே, சாலையோர வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ