கரியமாணிக்கம் போக்குவரத்து சிக்னல் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் பகுதியில் இந்தியன் வங்கி, வருவாய்துறை அலுவலகம், வணிக வளாகங்கள் உள்ளதால் சுற்று வட்டார 10 கிராமப் பகுதி மக்களின் அன்றாட தேவைக்கு கரியமாணிக்கம் வந்து செல்கின்றனர். இங்குள்ள நான்கு முனை சந்திப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன் போக்குவரத்து போலீசார் கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்தனர். போக்குவரத்து சிக்னல் அமைத்து 3 மாதத்திற்கு மேலாகியும் போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு வரமால் காட்சிப்பொருளாகவே உள்ளது.இதனால் அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்கிக் கொண்டு அவதியடைக்கின்றனர். ஆகையால் போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.