| ADDED : மார் 15, 2024 05:47 AM
புதுச்சேரி: புதிய அமைச்சராக திருமுருகன் பொறுப்பேற்ற போதும் அவருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி,ரகசிய காப்பு உள்பட மொத்தம் 14 இலாகாக்களை கவனித்து வந்தார்.முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட துறைகள் இருந்தன.அவர் நீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த இலாகா அனைத்தையும் முதல்வர் ரங்கசாமி கவனித்து வருகின்றார்.இதன் மூலம் முதல்வர் கவனிக்கும் இலாகாக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.இந்நியைில் நேற்று புதிய அமைச்சராக திருமுருகன் பொறுப்பேற்ற போதும் அவருக்கு உடனடியாக இலாகா ஒதுக்கப்படவில்லை.அவருக்கு சந்திரபிரியங்கா கவனித்து வந்த இலாகா ஒதுக்கப்படுமா அல்லது அமைச்சர்களின் இலாக்காக்களில் பெரிய மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.ஒரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.அமைச்சர் திருமுருகன் கூறும்போது,இலாகாக்களை பற்றி கவலைப்படவில்லை.எனக்கு எந்த இலாகாவை ஒதுக்க வேண்டும் என்பது முதல்வருக்கு தெரியும். முதல்வர் எந்த இலாகாவை ஒதுக்கினாலும்,அதில் சிறப்பாக மக்களுக்காக பணியாற்றுவேன் என்றார்.