ஒயர் திருட்டு
புதுச்சேரி : கடலுார் சாலை முதலியார்பேட்டையில், ஏ.எப்.டி., மில்லில் மிஷின் மற்றும் மோட்டார், ஒயர்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மில்லில் புகுந்து, அலுமினிய ஒயர்களை திருடி சென்றனர். அவற்றின் அதிப்பு 50 ஆயிரம் ஆகும். மில்லின் செக்யூரிட்டியாக இருந்த பரமசிவம், நேற்று காலை பார்த்தபோது, ஒயர்கள் திருடு போனது தெரியவந்தது. செக்யூரிட்ட கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ஒயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.