மேலும் செய்திகள்
தீபாவளி சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது
29-Apr-2025
புதுச்சேரி; தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம், முத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன் மனைவி கோமதி, 30; தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அதில், மாதம் ரூ.1,000 வீதம் 12 மாதங்கள் செலுத்தினால், தீபாவளி பண்டிகையின் போது 2 கிராம் தங்க காசு, ஒரு எண்ணெய் டின், 10 கிராம் வெள்ளி, 2 கிலோ சர்க்கரை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.இதை நம்பிய, அதேப்பகுதியை சேர்ந்த கதிரவன் மனைவி தீபா கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் முதல் 2024ம் ஆண்டு அக்டோபர் வரை மாதம் ரூ. 1,000 வீதம் (௧௦ சீட்டு) ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். ஆனால், கோமதி தெரிவித்தபடி, தீபாவளி பண்டிகையின் போது எந்த பொருட்களும் வழங்காமல், பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து தீபா அளித்த புகாரின் பேரில், கோமதி மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Apr-2025