உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பகுதிநேர வேலை எனக்கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை எனக்கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி: பகுதி நேர வேலை என கூறி பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி தட்டாஞ் சாவடி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனின் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி வாட்ஸ் ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறப்பட்ட படி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால் அதற்கான லாபம் கி கிடைக்கவில்லை, செலுத்திய பணத்தையும் திருப்பித்தரவில்லை. அதேபோல், மூலகுளம் பகுதியை சேர்ந்த ஆண் நபரிடம், சிங்கப்பூரில் வேலை எனக்கூறி ஏஜெண்டுக்கு ரூ.25 ஆயிரம் செயல்முறை கட்டணமாக செலுத்தி ஏமாந்துள்ளார். கோரிமேட்டை சேர்ந்த பெண்ணிடம் ரூ. 41 ஆயிரம், கரசூரை சேர்ந்த ஆண் நபரிடம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி ரூ.15,420 மோசடி, லாஸ்பேட்டையை சேர்ந்த பெண்ணிடம், ஆன்லைனில் சுடிதார் ஆர்டர் செய்து ரூ.36 ஆயிரத்தை இழந்துள்ளார். நாவற்குளத்தை சேர்ந்த ஆண் நபரிடம் பள்ளி முதல்வரின் செல்போனை ஹேக் செய்து, அவர் பேசுவது போல் ரூ.50 ஆயிரம் அவசர தேவைக்காக அனுப்ப கூறியுள்ளார். அதன்பேரில் ரூ.10 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகே அவருக்கு, மகனின் பள்ளி முதல்வர் போல் பேசி ஏமாற்றப்பட் டது தெரியவந்தது. இவர்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ