உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்க்கரை நோய் பாதித்த பெண் தற்கொலை

சர்க்கரை நோய் பாதித்த பெண் தற்கொலை

புதுச்சேரி; சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் பேட் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தனபதி, 62; சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர், அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டு ஆறாமல் இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை