மேலும் செய்திகள்
மாணவிகளுக்கு பாராட்டு விழா
08-Nov-2025
புதுச்சேரி: காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான குற்றச்சாட்டை தொடர்ந்து, புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி தலைமையில் உறுப்பினர்கள் சுஜாதா மற்றும் குழுவினர் நேற்று அக்கல்லுாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மகளிர் ஆணைய குழுவினர், உள் புகார் விசாரணை குழு தலைவரைச் சந்தித்து, பாலியல் குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். குற்றவாளிகள் மீது உடனடியாக மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் ஆணையம் சார்பில் வலியுறுத்தியது. தொடர்ந்து, மாணவர் ஆலோசகர் ஜூலியா அசோக்கை சந்தித்து, மாணவிகளின் மனநிலை பாதிக்கப்படாமல் கவனித்துக் கொள்ள ஆலோசனை வழங்கினர். மகளிர் ஆணையம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவிகளின் நலனில் எவ்வித சமரசமும் செய்யாது, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்' என்றனர்.
08-Nov-2025