உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரிசியில் மிகப்பெரிய ஊழல் மகளிர் காங்., குற்றச்சாட்டு 

அரிசியில் மிகப்பெரிய ஊழல் மகளிர் காங்., குற்றச்சாட்டு 

புதுச்சேரி: என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு அரிசியில் மிகப்பெரிய ஊழல் செய்கின்றனர் என புதுச்சேரி மாநில மகளிர் காங்., தலைவி நிஷா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் காங்., அலுவலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சியில் ரெஸ்டோ பார், நில அபகரிப்பு, குண்டர்கள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கேசினோ, அரிசி ஊழல் போன்ற பிரச்னைகள் உள்ளன. இதில் ஒரு கிலோ அரிசி ரூ.28 ஆனால் ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ.., அரசு ஒரு கிலோ அரிசியை ரூ.48க்கு வாங்குவதாக கணக்கு காட்டுகிறது. அப்படியென்றால் மாதம் தோறும் ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடி வரை ஊழலை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த அரிசியை மதியம் சமைது இரவு சாப்பிடுவதற்குள் துர்நாற்றம் வீசுகிறது. இந்த அரிசியை மக்கள் வாங்காததால் மீண்டும் கள்ள சந்தையில் விற்கின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்., மக்கள் நலன் சார்ந்த பிரசாரங்களில் அரிசி போடாததை கண்டித்து பேசியதன் விளைவாக, கடமைக்கு என்று அரசு கண்துடைப்புக்காக தரமற்ற அரிசியை கொடுத்து வருகிறது. அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.20 அதிகமாக கூட்டி வைத்து மிக பெரிய ஊழலை செய்து வருகிறார்கள். இந்த ஊழலை கண்டித்து புதுச்சேரி மாநில மகளிர் காங்., சார்பாக வரும் வாரங்களில் மிக பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை