உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் ஏரி கரையை இணைக்க மேம்பாலம் பணி துவக்கம்

பாகூர் ஏரி கரையை இணைக்க மேம்பாலம் பணி துவக்கம்

பாகூர்: பாகூர் ஏரியின் கரையை இணைக்க மேம்பாலம் மற்றும் தார்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரி பாகூர் ஏரி. 3.60 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரியில், 193 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும். விவசாயிகள் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், ஏரியின் உபரி நீர் வெளியேறும் அரங்கனுார் கலிங்கலில், கிழக்கு மற்றும் மேற்கு கரைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில், 10 கோடியே 10 லட்சத்து 74 ஆயிரத்து 543 ரூபாய் செலவில், ஏரி கலிங்கலின் இரண்டு பக்க கரைகளை இணைத்து மேம்பாலம் மற்றும் கரைகளை பலப்படுத்தி போக்குவரத்துக்கு ஏதுவாக 8.29 கி.மீ., சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான பூமி பூஜை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வராஜ், இளநிலை பொறியாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி