உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடிக்கால் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்

வடிக்கால் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்

புதுச்சேரி: வடகிழக்கு பருவமழை துவங்கியதால் நகரப்பகுதியில் வடிக்கால் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கிய கடந்த 16ம் தேதி தொடர் கனமழை பெய்தது. இதனால், நகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதற்கிடையே, நகரப் பகுதி மழையில் தத்தளித்ததை பார்த்த அரசு வடிக்கால் வாய்க்கால் துார்வாரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, காமராஜர் மணி மண்டபலம் அருகே பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டிருந்த வாய்க்கால்களை நேற்று முன்தினம் அவசர அவசரமாக துார்வாரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், வாய்க்காலை துார்வாரும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. கூலி தொழிலாளர்கள் கையுறை ஏதுமின்றி வாய்க்கால்களில் இறங்கி அதில் சிக்கி உள்ள குப்பைகளை தங்கள் கைகளாலேயே சுத்தம் செய்தனர். எனவே, பொதுமக்கள் வாய்க்கால்களில் குப்பை கொட்டுவதையும் பிளாஸ்டிக் பாட்டில்களை துாக்கி எறிவதையும் இனி மேற்கொள்ளாமல் புதுச்சேரியை பாதுகாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி