உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மகளிர் பொறியியல் கல்லுாரியில் ஆய்வக கட்டடம் பணி துவக்கம் 

 மகளிர் பொறியியல் கல்லுாரியில் ஆய்வக கட்டடம் பணி துவக்கம் 

புதுச்சேரி: லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில் ஆய்வக கட்டடம் அமைப்பதற்கான பணியினை செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பில் ஆய்வக கட்டடம் அமைப்பதற்கான பணிகள் துவக்க விழா நடந்தது. விழாவில், செல்வகணபதி எம்.பி., மற்றும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். கல்வித்துறை இயக்குநர் சிவக்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் பக்தவசலம், உதவி பொறியாளர் வேல்முருகன், மகளிர் பொறியியல் கல்லுாரி முதல்வர் தணிகாசலம், இளநிலை பொறியாளர் அனந்தபத்மநாபன், பா.ஜ., தொகுதி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ