புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஆணை
புதுச்சேரி : புதிதாக தேர்வு செய்யப்பட்ட 131 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 147 தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பதவிக்கு, 131 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களில் 114 பேர் காரைக்காலிலும், 17 பேர் மாகிக்கு என மொத்தம் 131 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, துணை இயக்குநர் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.