உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை

தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை

புதுச்சேரி, : குடும்ப பிரச்னையால் கட்டட தொழிலாளி துாக் குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி, 33; கட்டட தொழிலாளி. புதுச்சேரி கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் தெருவில், குடும்பத்துடன் வசித்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம், போதையில் அவர் வீட்டுக்கு வந்தார். ஏன் குடித்து விட்டு வருகிறாய் என, மனைவி தட்டி கேட்டார்.மனமுடைந்த அவர், வீட்டு அறைக்குள் சென்று துாக்குப் போட்டு கொண்டார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை